ஆப்நகரம்

மத்திய அரசு கொரோனா நிதி?; கோவை போலீஸ் எச்சரிக்கை!

மத்திய அரசு கொரோனா நிவாரண நிதி தருவதாக கூறி மோசடி நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கோவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Samayam Tamil 4 Aug 2021, 11:26 am
செல்போனில் தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
Samayam Tamil கோப்பு படம்
கோப்பு படம்


கோவை மாநகரில் சமீப நாட்களாக பொதுமக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர் மாநில அரசு போன்று, மத்திய அரசும் ரூபாய் 6,700 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அவர்கள் தங்களை மத்திய அரசின் பணியாளர் என்றும், நிவாரண நிதி உங்களுக்கு வழங்க இருப்பதாகவும் கூறி வருகின்றனர். பொதுமக்கள் சிலர் இது குறித்து மோசடியாளர்களிடம் விவரம் கேட்கும் பட்சத்தில் அவர்களின் வங்கிக் கணக்பொலிசெகுகள் குறித்த அனைத்து விவரங்களையும் பெற்று, வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடியாக எடுத்துள்ளது தெரிய வருகிறது.

மேகதாது அணையில் பாஜ இரட்டை வேடம்; கமல் கருத்தை ஆமோதித்த திருநாவுக்கரசர்!

எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி