ஆப்நகரம்

இப்படியும் சோளம் விற்கலாம்: ஒரே நாளில் டுவிட்டரில் டிரெண்டான சோளம் விற்பனையாளர்

கோவையை சேர்ந்த மசாலா சோளம் (Sweet Corn) விற்கும் ஒருவர், இசை எழுப்பிக்கொண்டே மசாலா சோளம் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 18 Oct 2018, 12:14 pm
கோவையை சேர்ந்த மசாலா சோளம் (Sweet Corn) விற்கும் ஒருவர், இசை எழுப்பிக்கொண்டே மசாலா சோளம் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil tito


இந்தியா முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும்உணவு வகை மசாலா சோளம். சென்னை, கோவை என்று தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இந்த உணவு வகைஅதிகமாக விற்கப்பட்டு வருகிறது.\


நாம் அனைவரும் மசாலா சோளம் கடைக்கு சென்றால் மசாலா சோளம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஒருவர், இசை எழுப்பிக்கொண்டே மசாலா சோளம் தயாரிக்கிறார்.

இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் மசாலா சோளம் ஆா்டர் செய்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில், இவர் எழுப்பும் இசையை கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.மசாலா சோளம் செய்ய பயன்படுத்தும்கரண்டியைபாத்திரத்தில் தட்டி இசையமைக்கிறார்.

இதை வீடியோ எடுத்துகாத்திக் ஸ்ரீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுவரை இந்த வீடியோவை3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும்500 பேர் இதை ’ரீ டுவீட் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி