ஆப்நகரம்

சாலையெல்லாம் பூசணிக்காய்கள்... துப்புரவு செய்யும் சமூக ஆர்வலர்

சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை அவ்வப்போது அவர்களே நீக்கிவிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Samayam Tamil 26 Oct 2020, 1:42 pm
ஆயுதபூஜை விஜயதசமி என்றெல்லாம் வந்துவிட்டாலே, சாலையில் கிடக்கும் பூசணிக் காய்களால் நடக்கும் விபத்துகள் என்றே தனித்தனி செய்திகள் வருவது வழக்கமாகி விடும். இந்நிலையில், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சாலையில் உடைக்கப்பட்டுக் கிடக்கும் பூசணிக்காய்களை சமூக ஆர்வலர் ஒருவர் அகற்றி வருகிறார்.
Samayam Tamil பூசணிக்காய்களை நீக்கும் சமூக ஆர்வலர்


கோவை சிங்காநல்லூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் ஆயுதபூஜை விஜயதசமி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் திருஷ்டி கழிப்பதற்காக உடைக்கப்படும் பூசணிக்காய்களைப் பொதுமக்கள் சாலைகளிலேயே போட்டுச் செல்கின்றனர்.

இந்த நிகழ்வால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆனாலும் பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாகப் போதியளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் ஆத்மா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பூசணிக் காய்களை அகற்றிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை!

அதே போல, சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை அவ்வப்போது அவர்களே நீக்கிவிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

அதே சமயம், பொறுப்பில்லாமல் சாலைகளில் பூசணிக்காய்களை உடைத்துவிட்டு போகும் மக்களாகிய நாமும் இதற்காக வெட்கப்பட வேண்டி உள்ளது.

அடுத்த செய்தி