ஆப்நகரம்

தலையில் தீ, கையில் பறை... கோவையில் ஒரு உலக சாதனை முயற்சி

தலையில் தீ கரகம் ஏந்தியபடி ஒற்றை காலில் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஏகபாதாசன நிலையில் பறையிசைத்து உலக சாதனை முயற்சி

Samayam Tamil 26 Oct 2020, 1:30 pm
கோவையில் கிராமிய புதல்வன் அகாடமியை சேர்ந்த மாணவர் தலையில் தீ கரகம் ஏந்தியபடி ஒற்றை காலில் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஏக பாதாசன நிலையில் பறையிசைத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil சாதனை மாணவர்


கோவை சரகத்துக்குட்பட்ட கரூர், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக். இளநிலை பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், கிராமிய கலைகளின் மீதுள்ள ஆர்வத்தால் கோவை சேரன் மாநகர் பகுதியில் இயங்கி வரும் கிராமிய புதல்வன் அகாடமியின் கரூர் கிளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது குரு கலைசேவகர் டாக்டர் கலையரசனின் வழிகாட்டுதல் படி விநோத உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதில் இவர் தலையில் தீ கரகம் ஏந்தியபடி சுமார் ஒரு மணி நேரம் ஒற்றைகாலில் நின்றபடி ஏகபாதாசன நிலையில் பறையிசைத்தார்.


கோவை கிராமியக் கலைஞருக்கு குளோபல் காம்பேக்ட் விருது

இதற்கான துவக்க விழா சேரன் மாநகர் பகுதியில் உள்ள கிராமிய புதல்வன் அகாடமியில் நடைபெற்றது. அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இதில் , கல்லூரி மாணவ,மாணவிகளிடையே தன்னம்பிக்கைகையை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ,உளியின் உருவம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ப்ரீத்தி பாலு சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சாதனை மாணவர் கார்த்திக் ,சாதிய ரீதியான பல்வேறு எதிர்ப்புகளை தன் சொந்த ஊரிலேயே சந்தித்து, தற்போது அதையும் மீறி இந்த நாட்டுபுற கலைகளை கற்று வருவதாகவும், கிராமிய கலைகளை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த சாதனையை தாம் செய்வதாகவும்” தெரிவித்தார்.

அடுத்த செய்தி