ஆப்நகரம்

அனாதைப் பிணங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் கோவை இளைஞர்கள்

கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் இருக்கும் 20 இளைஞர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் ஜீவசாந்தி என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

Samayam Tamil 13 Oct 2018, 8:47 pm
ஜீவசாந்தி என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நடத்தும் கோவை இளைஞர்கள் அனாதைகளாக இறந்தபோனவர்களின் உடல்களை இறுதிச்சடங்கு மரியாதைகளுடன் அடக்கம் செய்கின்றனர்.
Samayam Tamil 1531831800-717-1


கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் இருக்கும் 20 இளைஞர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் ஜீவசாந்தி என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். உறவினர்களோ நண்பர்களோ யாரும் இல்லாமல் அனாதைகளாக இறந்துபோகிறவர்களின் உடலை உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யும் சேவையைத் தான் இந்த அமைப்பின் மூலம் செய்கின்றனர்.

எந்த பலனும் எதிர்பாராமல் இந்த முயற்சியில் இறங்கிய 20 இளைஞர்களும் தங்கள் செலவிலேயே நான்கு இலவச அமரர் ஊர்திகளையும் வாங்கியுள்ளனர். மருத்துவமனை, காவல் நிலையம் என பல இடங்களிலிருந்து இவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் விரைந்து சென்று ஆதரவற்ற நிலையில் இறந்துபோனவர்களின் உடலைப் பெற்றுச்செல்கின்றர்.

அமரர் ஊர்தியில் எடுத்துச் சென்ற உடலை உரிய மரியாதைகள் செய்து நல்லடக்கம் செய்கின்றனர். “இந்தத் தொழில் நகரத்தில் பிழைப்புக்காக வந்து கஷ்டங்களைச் சந்தித்தவர்கள், கவனிப்பார் இல்லாமல் அனாதைகளாக இருந்துபோகிறார்கள். அவர்கள் உயிரோடு இந்தபோது செய்யமுடியாமல் போன உதவியை அவர்களின் இறப்புக்குப் பிறகாவது செய்வதில் நிறைவாக இருக்கிறது” என்கிறார், ஜீவசாந்தி குழுவில் உள்ள ஒரு இளைஞர்.

அடுத்த செய்தி