ஆப்நகரம்

கோவை: ரயிலின் உயர் மின்னழுத்த கம்பியை தொட்ட இளைஞர் மரணம்!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கோவை பீளமேடு ரயில் நிலையத்தில், ரயிலின் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Samayam Tamil 10 Sep 2018, 10:53 am
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கோவை பீளமேடு ரயில் நிலையத்தில், ரயிலின் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
Samayam Tamil railways-generic-pixabay-650_650x400_81520580376


நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஸ்ரீஹரி. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறார். ஸ்ரீஹரி மற்றும் அவரது நண்பர்கள் செபடம்பர் 8 ஆம் தேதிதேநீர் அருந்த காலை 4 மணிக்கு வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் பீளமேடு ரயில் நிலையத்திற்கு அருகில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது, ஸ்ரீஹரி தனக்கு ரயிலின் மேல் செல்லும் உயர்மின்னழுத்த கம்பியை தொட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரின் நண்பர்கள் அப்படி செய்யகூடாது என்று தடுத்துள்ளனர்.நண்பர்கள் சொல்வதை கேட்காமல், அவர் ரயிலின் மீது ஏறி உயர்மின் அழுத்த கம்பியை தொட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாராம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதனை பார்த்த ஸ்ரீஹரி நண்பர்கள் அதிர்ச்சியடைந்து , ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் ஸ்ரீஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி