ஆப்நகரம்

கோவை மருத்துவமனையில் இடமில்லை வாசலில் இறந்த முதியவர்: பலர் காத்திருப்பு!

கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காத்திருக்கும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 May 2021, 8:18 pm
கோவை அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் நோயாளிகள் ஆம்புலன்சிலே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை மருத்துவமனையில் இடமில்லை வாசலில் இறந்த முதியவர்: பலர் காத்திருப்பு!


கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளிடம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லை என்று தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு உரியப் பதில் கிடைக்காமல், பணம் செலவழித்தாலும் பரவாயில்லை தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று எண்ணும் பொதுமக்கள் அங்குச் சென்றும் ஏமாற்றத்துடனே திரும்புகிறார்கள்.

குவிந்து கிடக்கும் பிணங்கள்: அலங்கோலமான கோவை எரிக்கவும் இடமில்லை!

கோவை அரசு மருத்துவமனை பொறுத்தவரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களைப் பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர கதியில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்த நோயாளிகள் அந்தந்த வாகனங்களிலேயே சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்.

பல்வேறு இடங்களிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்ஸ் இல்லையே சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையே முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் உடனடியாக அரசு நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி