ஆப்நகரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பட்டியலிட்ட கோவை கலெக்டர்!

கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பல்வேறு கட்டங்களில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Samayam Tamil 30 Sep 2020, 9:46 pm
தமிழகம் முழுவதும் ஊரடங்கிற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Samayam Tamil rajamani


இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

"கோவையில் மாநகராட்சி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலாக உள்ள சூழலில் அதனை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. தொற்று பரவல் கூடுதலாக உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உணவு அதிகாரி என பணம் பறிக்கும் ஆண்டீஸ், மக்களே உஷார்!

கோவை மாவட்டத்தில் இதுவரை 11,662 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் 8,203 முகாம்கள் மாநகராட்சி பகுதியில் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் 13,38,000 பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்யபட்டுள்ளது.

இம்முகாமில் சோதனை செய்தவர்களில் 8,262 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது. தினமும் 16,000 முதல் 18,000 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

இருமல், காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் உள்ளதா என 2000 பணியாளர்கள் வீடு வீடாக சென்று கள பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொற்றின் பாதிப்பு வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு எதிரொலி... பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை

தொழில் நகரமான கோவையில் ஊரடங்கிற்கு பின்னர் வடமாநில தொழிலாளர்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்த பின்னர் 14 நாட்களில் தனிமைப்படுத்திக் கொண்டு பணி மேற்கொள்ள தொழில் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தொழிற்சாலைகளில் ஆய்வுகள் அரசு அதிகாரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா குறித்து காலை முதல் இரவு வரை 300 வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.மக்கள் அதிகம் கூடாத வகையில் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்த அவர் மக்களின் ஆதரவு மூலம் இதனை கட்டுபடுத்த முடியும்” என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி