ஆப்நகரம்

கழிவை அவரவர்களே அகற்றணும்: கோவை மாநகராட்சி!

குப்பை மேலாண்மை தொடர்பாகக் கோவை மாவட்டத்தில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின் மூலம் ஆக்கப்பூர்வமான கட்டமைப்பை உருவாக்க முடியும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது...

Samayam Tamil 28 Oct 2020, 12:33 pm
கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், அவர்கள் உருவாக்கும் கழிவை அவரவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது.
Samayam Tamil கழிவை அவரவர்களே அகற்றணும்: கோவை மாநகராட்சி!
கழிவை அவரவர்களே அகற்றணும்: கோவை மாநகராட்சி!


மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களுடன் குப்பை மேலாண்மை தொடர்பாக மாநகர கமிஷ்னர் குமரவேல் செவ்வாய்க் கிழமை ஆலோசனை நடத்தினார்.

முதற்கட்டமாக உணவகங்களில் வெளியேற்றப்படும் கழிவுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து அதை மறு சுழற்சிக்கு உட்படுத்த உதவ வேண்டும் என மாநகராட்சி சார்பாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப் பிரிக்கப்படும் கழிவுகளை மாநகராட்சி வாகனங்களைக் கொண்டு அவை மறுசுழற்சிக்குக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த போக்குவரத்துக்கு ஆகும் செலவைச் சம்பந்தப்பட்ட உணவகங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் குமரவேல் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..! கொரோனா ரொம்ப கம்மிங்க

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் குமரவேல் நிருபர்களிடம் கூறுகையில், “தனியார் உணவகங்கள் முறையாகக் கழிவுநீர் மேலாண்மையை கடைப்பிடிக்காததால், அவை அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. இது அப்பகுதியில் உள்ள மக்களை எரிச்சலூட்டுகிறது. இதன் காரணமாக இப்போது புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை மேலாண்மை தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு புதிய யோசனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கோவை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்களும் மாநகரின் குப்பை மேலாண்மை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி