ஆப்நகரம்

பிச்சை எடுத்த சிறுவனை தத்தெடுத்த கோவை தம்பதியர்!

17 வருடங்கள் குழந்தைகள் இல்லாத கோவையை சேர்ந்த தம்பதியர், தூத்துகுடியில் இருக்கும் ஆதரவற்ற சிறுவனை தத்தெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 3:32 pm
17 வருடங்கள் குழந்தைகள் இல்லாத கோவையை சேர்ந்த தம்பதியர், தூத்துகுடியில் இருக்கும் ஆதரவற்ற சிறுவனை தத்தெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 20180315_FPA-KS-Adoption (1)


நாகர்கோவில், மார்த்தாண்டத்தில்6 வயது சிறுவன் விஜய் வசித்து வந்தார் . இவரது தந்தை மரணமடைந்த நிலையில்அவரது தாய்தான் அந்த சிறுவனை பார்த்துகொண்டார். மேலும் அவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் இறந்துவிடவே இரு குழந்தைகளை பார்த்துகொள்ள யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வெட்டுமணி என்ற நபரிடம் 6 வயது சிறுவன் விஜய் மாட்டிகொண்டார். அவர்அவனை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பார். காலை முழுவதும் பள்ளியில் படித்துவிட்டு , மாலை முதல் இரவு வரை பிச்சை எடுப்பான் விஜய். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு கடை வைத்திருக்குஒருவர் , குழந்தை பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்துகுழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் அந்தச் சிறுவனை மீட்டு , குழந்தை பாதுகப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

அதே சமயத்தில் கோவையை சேர்ந்த தம்பதியருக்கு 17 வருடங்களாக குழந்தை இல்லை . அவர்கள் குழந்தையை தத்தெடுக்க வேண்டி கடந்த 2016 ஆண்டு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த தம்பதியர் தூத்துக்குடியில் உள்ள குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு சிறுவன் விஜய்-யை பார்த்தவுடன் பிடித்துவிடவே அவனை தத்தெடுத்தனர்.. புதிய உறவு கிடைத்த மகிழ்ச்சியில் அந்த சிறுவன் அப்பா, அம்மா தம்பதியரை அழைத்தது அனைவரும் நெகிழச்செய்துள்ளது.

அடுத்த செய்தி