ஆப்நகரம்

தடுப்பூசிக்கு ஃபிரி டாக்சி விட்ட கோவை பாஜக: போன் போட்டா போதும்!

தடுப்பூசி செலுத்தச் செல்பவர்களுக்கு பாஜக சார்பாக இலவச வாகன சேவை வழங்கப்படும் என அக்கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2021, 10:37 pm
கோவை மாநகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தச் செல்பவர்களுக்கான இலவச சேவை மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
Samayam Tamil தடுப்பூசிக்கு ஃபிரி டாக்சி விட்ட கோவை பாஜக: போன் போட்டா போதும்!


கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்தும் மையத்திற்குச் செல்வதற்கு இலவச வாகன சேவை ஏற்படுத்தித் தருகிறது. இந்த வாகன சேவையை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

மரத்தையெல்லாம் வெட்டி கோவை ஸ்மார்ட் சிட்டி ஆகணுமா?: தீவிரமெடுக்கும் போராட்டம்!

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா காலகட்டத்தில் பாஜக மக்களுக்கான பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறுகிய காலத்தில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தச் செல்வதற்குக் கட்டணமின்றி வாகன சேவை கட்சி சார்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. உதவி மையத்தையோ அல்லது பாஜக அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு இந்த சேவையை எளிதாக மக்கள் பெறலாம். அதோடு, தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அடுத்த செய்தி