ஆப்நகரம்

கோவை அரசு மருத்துவனை இனி தடுப்பூசி எப்போதுமே கிடையாது: கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்!

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Apr 2021, 5:52 pm
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வீசத் துவங்கியுள்ளது. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
Samayam Tamil கோவை அரசு மருத்துவனை இனி தடுப்பூசி எப்போதுமே கிடையாது: கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்!


அதன்படி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி மையம் செயல்பட்டு வந்தது. அதேவேளை கொரோனா நோயாளிகள் அதிகளவில் இருப்பதால் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் தடுப்பூசி மையம் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இதர நோயாளிகளும் அங்கு அதிகளவு வந்த வண்ணம் உள்ளதால் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்றிலிருந்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும்.

இரவு ஊரடங்கில் கோவையில் வடமாநிலத்திற்கு ஆம்னி பேருந்துகள்: அதிகாரிகள் சப்போர்ட்!

அதேபோல், இனிவரும் நாட்களில் கல்லூரியிலேயே இந்த அரசு கல்லூரியிலே வைத்து தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி கண்டிப்பாகச் செலுத்தப்படாது என மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரி தடுப்பூசி மையம் முதல் நாளான இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டன. இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வந்து செலுத்திக் கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஓய்வு எடுப்பதற்குப் படுக்கை, தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வசதி, வெளியில் அமர்ந்து கொள்ள மேசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி