ஆப்நகரம்

கோவையில் கொரோனா குணமடைந்தவர்களை கண்காணிக்க அறிவுறுத்தல்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து இரண்டு வாரங்களுக்கு பின் டிஸ்சார்ஜ் சம்மரி வழங்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார்

Samayam Tamil 17 Sep 2020, 10:08 pm
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பது குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், சிகிச்சை முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதித்தார்.
Samayam Tamil தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் ஆய்வு
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் ஆய்வு


முன்னதாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டிட பணியை ஆய்வு செய்த அவர், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஊட்டி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு)காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், “அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வுதான். சேலம், ஈரோடு அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகியவை கொரோனா தொற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது என்றார்.

நீட் ரிசல்ட் வரட்டும்...அப்புறம் பாருங்க சூர்யாவை... பாஜக அண்ணாமலை சவால்!!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களுக்கு திரும்பவும் மூச்சுத்திணறல் வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், இரண்டு வாரங்களுக்கு எந்த அறிகுறிகள், தொந்தரவு இல்லையெனில் அதன் பிறகே அவர்களுக்கு டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்போது நாராயணபாபு தகவல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி