ஆப்நகரம்

ரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு!

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் மேல் நிலைப் பள்ளி தனது கொடுத்து கட்டிடமும் கட்டித் தரத் தயாராக தொழிலதிபர் உறுதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Nov 2020, 11:42 pm
கோவை எலச்சிபாளையம் பகுதியில்தான் புதிதாகக் கோயில் கட்ட இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி ஆகுமாம். ஊர் மக்கள் எடுத்த முயற்சிக்கு மதிப்பளித்து தொழிலதிபர் இடத்தை வழங்கியுள்ளார்.
Samayam Tamil elachipalayam businessman donates land worth rs 3 crore for govt school
ரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு!



50 ஆண்டுகளாகப் பல ஊர் கண்ட கனவு!

கோவை கருமத்தம் பட்டி அருகே ஊள்ள ஊர் எலச்சிபாளையம். இந்த ஊரில் 50ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் சூழலில், அதன் தரம் இப்போதுவரை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக எலச்சிபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல்நிலை கல்விக்கு வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வந்துள்ளது.

அரசு சிம்பிளாகச் சொன்ன பதில்...

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையைப் பலநாட்களாக அரசிடம் வைத்து வந்துள்ளனர். இதற்கு அரசு, “நிலமிருந்தால், நாங்கள் பள்ளிக்குக் காட்டிடம் கட்டித் தருகிறோம்” எனப் பதில் அளித்துள்ளது.

ஏக்கர் கணக்கில் நிலத்தைக் கல்விக்காக வாரிக் கொடுத்த மனம்...

இந்த சூழலில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், எலச்சிபாளையம் பகுதியில் தான் வைத்திருந்த நிலத்தில் ஒன்றரை ஏக்கரை மேல்நிலைப் பள்ளி அமைக்கத் தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும்.

நல்ல குணம் கொண்ட தொழிலதிபரைப் பாராட்டும் ஊர் மக்கள்!

பல குடும்பங்களில் கனவாகத் திகழ்ந்த மேல்நிலைப் பள்ளியை அமைத்துத் தர முன் வந்துள்ள ராமமூர்த்தியின் செயல் பலரைக் கவர்ந்து வருகிறது. இந்த சூழலில் ராமமூர்த்திக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினர்.

மக்கள் பங்கும் இதில் உள்ளதாம்: தொழிலதிபர் பேச்சு!

பாராட்டு விழாவில் பேசிய ராமமூர்த்தி, “மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பலர் பாதியிலே கல்வி கற்பதைத் தவிர்க்கின்றனர். இதைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

கல்விக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்!

ராமமூர்த்தி குறிப்பிட்ட விழாவில் மேடையில் பேசுகையில், தான் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளி உருவாகி, அதில் மாணவர்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேறும் போது தான் மனநிறைவோடு உணர்வேன் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் பள்ளிக்குக் கட்டிடம் கட்டித் தரவும் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி