ஆப்நகரம்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த மீன் விலை; மீன் பிரியர்கள் அதிர்ச்சி..!

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் கோவை உக்கடம் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து 50 சதவீதமாக குறைந்தது.‌ மீன் வரத்து குறைவால் மீன் விலை 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 May 2023, 12:47 pm

ஹைலைட்ஸ்:

  • ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடி தடை காலம்
  • மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் மீன் வரத்து குறைவு
  • கோவை உக்கடம் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து ஐம்பது சதவீதமாக குறைவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து 50 சதவீதமாக குறைவு:

தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடி தடை காலமாக இருந்து வந்தது.
தடைக்கால சீசன்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக இசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைக்காலம் 61 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி முடிகிறது. இந்த ஆண்டின் தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. தடைக்காலம் தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள 3000 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்து குறைந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. கோவை உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட் வரும் மீன்கள் குறைந்துள்ளது. மேலும் விலையும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்; பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்!

இது குறித்து கோவை மாவட்ட மீன் வியாபாரி கூறும் போது, கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது இங்கு 50-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இருபதுக்கு மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தூத்துக்குடி ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடகா மாநிலம் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 முதல் 60 டன் வரை மீன்கள் வரத்து காணப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 300 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். சங்கரா, பத்திரம், மத்தி ஹைலை, விளையா மீன் போன்ற பல்வேறு வகையான கடல் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மீன் விலை 20 சதவீதமாக உயர்வு:

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதி மீன் வியாபாரிகளும் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் மீன் வியாபாரிகளும் குன்னூர், ஊட்டி மீன் வியாபாரிகளும் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி செல்கின்றனர். இதைத் தவிர கோவை மாநகர மக்கள் நேரடியாக சென்று மார்க்கெட்டில் மீன் வாங்குகின்றன.

தடைக்காலம் என்பதால் 50 சதவீத மீன் வரத்து குறைந்துள்ளது. அதேசமயம் விலை 20% அதிகரித்துள்ளது. மீன் மார்க்கெட் எப்போதும் போல்தான் உள்ளது. மீன்கள் வரத்து குறைந்தாலும் மீன் மார்க்கெட்டில் மக்களுக்கு தரமான மீன்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி