ஆப்நகரம்

கோவையில் விரியன் வகை பாம்புகள்: வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்ட வனப்பகுதிக்குள் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பெட்டியில் கொடிய விஷம் உள்ள பாம்புகள் தங்கி இருந்த நிலையில், வனத்துறையினர் நூல் இலையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 10 Nov 2020, 11:20 am
கோவை வனக் கோட்டத்தில் தொடர்ச்சியாக யானைகள் உயிரிழந்து வருகிறது. இந்த சூழலில் யானைகளின் நடமாட்டத்தையும் அதன் உடல் நலத்தையும் கண்காணிக்கக் கோவை வனக் கோட்டப் பகுதிகளான தடாகம், மதுக்கரை , மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
Samayam Tamil கோவையில் விரியன் வகை பாம்புகள்: வனத்துறை எச்சரிக்கை!
கோவையில் விரியன் வகை பாம்புகள்: வனத்துறை எச்சரிக்கை!


இதன் மூலம் யானைகள் நடமாட்டம் மட்டுமன்றி பிற வன விலங்குகளின் நடமாட்டத்தையும் கண்டறியும் வகையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் போளுவாம்பட்டி மற்றும் ஆனைக்கட்டி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

இப்படிப் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளை அவ்வப்போது வனத்துறையினர் சேகரிப்பது வழக்கம். அதன்படி, தடாகம் வால் குட்டை பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமரா காட்சிகளை வனத்துறை ஊழியர்கள் சேகரிக்கச் சென்றனர்.

102 வயது தாயை ரோட்டில் நிறுத்தி, ஏமாற்றும் பிள்ளைகள்: கோவை நிலவரம்!

அப்போது கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சுருட்டை விரியன், கட்டு விரியன் பாம்புகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பை வெளியேற்றி அதிலிருந்து கேமராவை அகற்றினர். அதன்பின் வனத்துறை ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாகக் கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரிக்கும் வனத்துறை ஊழியர்கள், வனப்பகுதிக்குள் ரோந்து செல்லும் ஊழியர்கள் மிகவும் கவனத்துடன் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி