ஆப்நகரம்

கோவையில் கொரோனா 2ஆம் அலை பதற்றம் உச்சத்தில் உள்ளது!

கோவை காந்திபுரம் பகுதியில் சமூக இடைவெளியின்றி மற்றும் முககவசங்களை அணியாமல் சகஜமாகச் சுற்றி வரும் பொதுமக்கள் காரணமாக மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2021, 8:51 pm
கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றாத பொதுமக்கள், வணிக நிறுவனங்களைக் கண்டறிந்து அவ்வப்பொழுது அபராதங்களையும் மாநகராட்சி விதித்து வருகிறது.
Samayam Tamil கோவையில் கொரோனா 2ஆம் அலை பதற்றம் உச்சத்தில் உள்ளது!


இந்த நிலையில் கோவை மாவட்டம் காந்திபுரம் அரசு பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக எந்த இடைவெளியும் இல்லாமல் வருகிறார்கள். அதுமட்டுமின்றி அதில் பெரும்பாலானோர் முகக் கவசம் கூட அணிவதில்லை.

கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடமாக காந்திபுரம் பேருந்து நிலையம் இருந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர்.

கோயில், மசூதிய மூடணும்....; மதுக்கடைகள் நடக்கலாமா?

ஆனால், காந்திபுரம் பகுதியில் மாநகராட்சியின் அறிவிப்புகளை மதிக்காமல் தனி மனித இடைவெளி இல்லாமல், முகக் கவசங்கள் அணியாமலும், சென்று வரும் பயணிகளால் கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று மீண்டும் தீவிரமெடுக்கும் சூழல் நிலவுவதாக அதிகாரிகளும் மருத்துவர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி