ஆப்நகரம்

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது.

Samayam Tamil 8 Mar 2021, 11:43 pm
இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
Samayam Tamil ஈஷா யக்‌ஷா திருவிழா


அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று பிரபல ஹிந்துஸ்தானி பாடகி திருமதி.கவுசிகி சக்ரபோர்த்தி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தன் பாடல் திறமையால் பி.பி.சி விருதை பெற்றவர். இவரது தந்தை திரு.அஜோய் சக்ரபோர்த்தியும் ஹிந்துஸ்தானி பாடகர் ஆவார்.

எடப்பாடி சொன்ன மகளிர் தின ஹேப்பி நியூஸ்... குடும்பத் தலைவிகளுக்கு மாசத்துக்கு 1,500 ரூபாய்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக யூ-டியூப்பில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி