ஆப்நகரம்

கோவையில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

கோவை மாவட்டத்தில் ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து சடலமாகக் கிடந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 10 Apr 2021, 1:58 pm
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுள்ளது. தொடர்ந்து அதன் உடலைக் கைப்பற்றியுள்ள வனத்துறையினர் அதைப் பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளனர்.
Samayam Tamil கோவையில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!


கோவை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட போட்டுக்கடவு வனப்பகுதியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் வனப்பணியாவார்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பசுங்கனிமேடு என்ற இடத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் அங்குச் சோதனை செய்தனர். அதில் ஆண் சிறுத்த ஒன்று அந்த இடத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சம்மர் டூர் ப்ளான் பண்றீங்களா... அதுக்கு முன்னாடி இதை படிங்க!

இதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர் எப்படி இறந்துள்ளது என்பது குறித்து விசாரணையைத் தொடக்கியுள்ளனர். இதற்கிடையே சிறுத்தை உடலை, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுத்தை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. வெயில் காலங்களில் நீர் தேடி அலையும்போது விலங்குகள் உயிரிழப்பது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி