ஆப்நகரம்

விண்வெளிக்குப் போகும் செயற்கைக்கோள்... கரூர் மாணவர்கள் அசத்தல்

​ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டபோது இவர்களது கண்டுபிடிப்பின் மீது சர்வதேச வெளிச்சம் விழுந்துள்ளது.

Samayam Tamil 14 Oct 2020, 11:46 am
கரூரில், கல்லூரி மாணவர்கள் மூவர் சேர்ந்து சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இதனை நாசா தற்போது அங்கீகரித்துள்ளது. அத்துடன் , நாசா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, இந்த செயற்கைக்கோள் விரைவில் விண்ணுக்கும் ஏவப்படவுள்ளது.
Samayam Tamil satellite students


கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் பி.எஸ்.ஸி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அட்னன், அருண் மற்றும் கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ,, இரண்டாம் ஆண்டு படிக்கும், தென்னிலை பகுதியைச் சேர்ந்த கேசவன் ஆகியோர் இணைந்து, செய்ற்கைக் கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்தியன் சாட் என்றும் பெயரிட்டுள்ளனர்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டபோது இவர்களது கண்டுபிடிப்பின் மீது சர்வதேச வெளிச்சம் விழுந்துள்ளது. இதன் விளைவாக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படவுள்ள, எஸ்.ஆர். 7 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு 'இந்தியன்-சாட்' செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? புள்ளி விவரங்கள் தெரிவிப்பது இதுதான்!

சர்வதேச விண்வெளி மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சிறிய செயற்கைக்கோளைக் கண்டுபிடித்த இந்த ஊள்ளூர் விஞ்ஞான மாணவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி