ஆப்நகரம்

கோவை கொரோனா மருத்துவர்கள் மாத சம்பளம் ரூ. 2500: சோறாது போடுங்க என போராட்டம்!

கோவை மாவட்டத்தில் ஊக்கத்தொகையை அதிகரித்துத் தரக்கோரி கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றி வரும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 7 Jun 2021, 7:45 pm
கோவை ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் (கற்பகம்) மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது கொரோனா சிகிச்சை மையமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை கொரோனா மருத்துவர்கள் மாத சம்பளம் ரூ. 2500: சோறாது போடுங்க என போராட்டம்!


அங்கு 144 பயிற்சி மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதாகவும், உணவு, இருப்பிட வசதிகூட செய்து தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு நிலவி வந்தது.

இந்த சூழலில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை அலுவலகம் முன்பு பணியைப் புறக்கணித்து மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து கோவையில் கொரோனா நோயாளிகள் தற்கொலை: தாங்க முடியாத சோகம்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும், ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பயிற்சி மருத்துவர்களை அழைத்துப் பேசி வருகின்றனர்.

அடுத்த செய்தி