ஆப்நகரம்

இளைஞரின் உயிரைப் பறித்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பதில் சொல்லுமா அரசு?

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கட்டிய மூங்கில் வெளியே நீட்டியபடி இருந்ததால், அதில் தெரியாமல் அடிபட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

TNN 26 Nov 2017, 3:58 pm
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கட்டிய மூங்கில் வெளியே நீட்டியபடி இருந்ததால், அதில் தெரியாமல் அடிபட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil kovai youngster died in a accident caused by the arrangement of mgr centenary celebrations
இளைஞரின் உயிரைப் பறித்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பதில் சொல்லுமா அரசு?


கோவை அவிநாசி ரோடு மருத்துவ கல்லுரி அருகில் நவம்பர் 24 ஆம் தேதியன்று M G R நூற்றாண்டு விழாவிற்கு ஆர்ச் போடுவதற்காக ரோட்டை மறித்து கட்டியமூங்கில் வெளியே நீட்டியபடி இருந்தது.

இது தெரியாமல் அந்த வழியே சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த மூங்கிலில் மோதி தலையில் அடிபட்டு மரண அடைந்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடுவதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விபத்தில் மரணமடைந்த இளைஞர் வெளி நாட்டிலிருந்து பெண் பார்பதற்காக கோவை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி