ஆப்நகரம்

கணவனை போலீசிடம் இருந்து காப்பாற்ற தாலியை விற்க முயன்ற பெண்!

திருந்தி வாழ்ந்துவரும் கஞ்சா வியாபாரியை கேஸ் போட்டு விடுவோம் என்று மிரட்டி, ஒரு வட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற பெண் போலீஸ், தலைமைக் காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 2 Jan 2021, 11:59 am
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கஞ்சா வியாபாரியான இவர், சமீபகாலமாக அந்த தொழிலை விட்டுவிட்டு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் -கோவை


கட்டிட மேஸ்திரியாக இருக்கும் விஜயகுமாரை கஞ்சா விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அடிக்கடி அழைத்து, பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விஜயகுமாரை அழைத்து வந்து போலீசார், 15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக வழக்கு போட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். சாதாரண வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என போலீசார் பேரம் பேசியுள்ளனர்.

அதிர்ச்சி வீடியோ, தள்ளு வண்டியில் பிணம்: கோவை அரசு மருத்துவமனை இன்றைய நிலை!

இதனையடுத்து, நேற்று முன்தினம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

மீதிப் பணத்தை புரட்ட தனது தாலியை விற்க மகேஸ்வரி முயன்றபோது, உறவினர் ஒருவர் அவரை தடு்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த நிலையில், விஜயகுமார் மீது கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோர்ட் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

போட்டோ கிராபருடன் சென்று பூட்டை உடைத்த போலீஸ்!

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகியோரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி