ஆப்நகரம்

பிரதமராகும் முதல்வர் ஸ்டாலின்.. டெல்லியை அலறவிட்ட செந்தில் பாலாஜி..!

இந்திய தேசத்தை ஆளக்கூடிய பாரத பிரதமராக ஆட்சிப்பொறுப்பு ஏற்க இருக்கின்ற ஸ்டாலின் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

Samayam Tamil 11 Mar 2023, 7:21 pm
கோவை: இன்று கருமத்தாம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கைத்தறி விசைத்தறி சங்கங்களின் சார்பில் கைத்தறி விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. கோவை,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
Samayam Tamil sendhil balaji


இதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், காந்தி, முத்துசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பாரத பிரதமராக ஆட்சிப்பொறுப்பு ஏற்க இருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றதால் அங்கு ஆரவாரம் கிளம்பியது.

முன்னதாக கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், 4000-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து உங்களையும் அழைத்துவந்து இந்த இயக்கத்தில் சேர்த்திருக்கிறாரே, அதற்காக நான் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, என்னுடைய சார்பில் மட்டுமல்ல, நம்மை ஆளாக்கி உருவாக்கி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போட நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு நீங்களெல்லாம் இன்றைக்கே களமிறங்க வேண்டும், அதற்குரிய வியூகத்தை அமைத்திட வேண்டும்.

கோவில்பட்டி, பொள்ளாச்சியில் 5ஜி சேவை; ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த மெகா சர்ப்ரைஸ்!

ஏனென்றால், இன்றைக்கு மதத்தைப் பயன்படுத்தி, சாதியைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன்மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு இன்றைக்கு அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்றத் தேர்தல்தான். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுவையையும் சேர்த்து 40-க்கு 40. நாடும் நமதே, நாளையும் நமதே.

ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம், அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், துணைநிற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அடுத்த செய்தி