ஆப்நகரம்

வீடு இல்லையா? உடனே அரசு வீடு கட்டித்தர அமைச்சர் உறுதி

கோவை: பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார்.

Samayam Tamil 18 Aug 2018, 10:50 pm
கோவை: பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil 201702251908513651_minister-velumani-slams-stalin_SECVPF


கேரளாவில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய இவை கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களிலிருந்து சேரிக்கப்பட்டவை. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முயற்சியால் இவை திரட்டப்பட்டன.

ரூ. 2 கோடி மதிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் உடைகள், உணவு பொருட்கள், பேஸ்ட், பிரஷ் போன்ற 31 அத்தியாவசிய பொருட்கள் 21 வாகனங்களில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொருட்களை அனுப்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “மழையினால் வால்பாறை, பொள்ளாச்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரி செய்யப்பட்டுள்ள. பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி