ஆப்நகரம்

கோவையில் கமல்ஹாசன் கப்சிப்-ஆனத்தற்கு இதுதான் காரணமாம்: அவரே சொல்கிறார்!

கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

Samayam Tamil 2 Aug 2021, 2:24 pm
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
Samayam Tamil கோவையில் கமல்ஹாசன் கப்சிப்-ஆனத்தற்கு இதுதான் காரணமாம்: அவரே சொல்கிறார்!


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம்.

2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை. மேலும் பட்ஜெட்டில் கிராமசபைக்கு எனத் தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும். அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை சீரழித்து நாசமாக்க துடிக்கும் கல்குவாரி: அதிர்ச்சியூட்டும் கதை!
கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் பேட்டியின்போது தெரிவித்தார். மேலும் அவர் சில இரங்கல் வீடுகளுக்குச் செல்ல வேண்டி இருப்பதாகவும் நாளை செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி