ஆப்நகரம்

தொடரும் ஊரடங்கு விதிமீறல்கள் - கோவையில் விண்ணை முட்டும் வழக்குகள்!

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக 20 ஆயிரத்திற்கும் மேலான வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 21 May 2020, 10:35 am
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 13,191 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,221 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். 5,882 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 88 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கோவையில் விதிமீறல்


144 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லாமல் கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கோவை புறநகர் பகுதியில் பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய சப் டிவிஷன் காவல் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை 17 ஆயிரத்து 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவை விட கடன் எங்கள் உயிரை எடுக்கிறது..! ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை...

இதன்மூலம் 20 ஆயிரத்து 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 16 ஆயிரத்து 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 62 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் 15 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறியதாக 6 ஆயிரத்து 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 1,897 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆயிரத்து 644 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் முழுவதும் மார்ச் 25 முதல் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மீறியதாக 24,500 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 23,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி