ஆப்நகரம்

சீமான் வலியுறுத்தலால் கோவைக்குக் கிடைத்த நன்மை...

கோவை மாவட்ட, நாம் தமிழர் கட்சியின் சார்பில், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் அடுத்த, காமராஜர் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நூறு குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ மதிப்புள்ள அரசி பைகள் வழங்கப்பட்டது.

Samayam Tamil 21 Jun 2021, 7:17 pm
நாம் தமிழர் கட்சியின் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்குகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil சீமான் வலியுறுத்தலால் கோவைக்குக் கிடைத்த நன்மை...


நாம் தமிழர் கட்சியின் உணவு உறுதி திட்டப் பொறுப்பாளர்களான அசோக்குமார், ராஜ்குமார் தங்கள் பணிகள் குறித்து கூறியிருப்பதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தலின்படி கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சாலையோர மக்களுக்கும் ஆதரவற்றோருக்கும் “உணவு உறுதி திட்டம்” என்ற திட்டத்தை உருவாக்கி, 13 நாட்கள் மதிய உணவு கொடுத்து வருகிறோம்.

இதுவரை ஆயிரத்து 300 ஆதரவற்ற மற்றும் உணவு தேவையுள்ள மக்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்,
மேலும் இத்திட்டத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்கள் உதவிகள் இதுவரை 500 குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை தீப்பந்தம் போராட்டம் ஒரே நாளில் வெற்றி: மக்கள் பெருமிதம்!
அதேபோல் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட, 95ஆவது வார்டு மதுக்கரை அறிவொளி நகர், ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், பால், ரொட்டி, கபசுர குடிநீர் போன்றவற்றைத் தொகுதி பொறுப்பாளர்களான ராமகிருஷ்ணன், உமா ஜெகதீஷ், சேக் அப்துல்லா, செல்வகுமார், கிரண், சீனிவாசன் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்களான கார்த்திக் ராஜா
அகமது ஆசிக், சரவணன், ரங்கநாதன், சுபாஷ், சன்வர்,மரியசெல்வ ஸ்டாலின், மத்துக்குமார், சித்திரை செல்வன், லாவண்யா ஆகியோர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி