ஆப்நகரம்

பறவை காய்ச்சல் நேரத்தில் கோவை எல்லையில் இப்படிதான் நடக்கிறது!

பறவை காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கேரளாவிலிருந்து கோவை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jan 2021, 5:13 pm
பறவை காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கேரளாவிலிருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Samayam Tamil பறவை காய்ச்சல் நேரத்தில் கோவை எல்லையில் இப்படிதான் நடக்கிறது!
பறவை காய்ச்சல் நேரத்தில் கோவை எல்லையில் இப்படிதான் நடக்கிறது!


கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

அங்குப் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தொடர்ந்து வாத்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துக்களை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த போலீசின் செயலை பார்த்து கோவையே சல்யூட் அடிக்குது!

கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல், தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க கோவை வாளையார் சோதனை சாவடியில் கால்நடைத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கேரளாவிலிருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் பிற வாகனங்களுக்கும் குளோரின்-டை-ஆக்ஸைடு என்ற கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி