ஆப்நகரம்

சங்கிலியைத் திருட வந்த திருடனைப் பிடித்து அசத்திய கோவை பாட்டி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடனை மூதாட்டி பொது மக்கள் உதவியுடன் கையும் களவுமாகப் பிடித்து, சம்பந்தப்பட்டவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 20 Apr 2021, 6:48 pm
கோவை கவுண்டம்பாளையம் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமாத்தாள். 62 வயதான இவர் கிடைக்கும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
Samayam Tamil சங்கிலியைத் திருட வந்த திருடனைப் பிடித்து அசத்திய கோவை பாட்டி!


இந்த சூழலில் ராமத்தாள் வேலை முடிந்து தென்றல் நகர் என்ற பகுதி வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் ராமாத்தாள் கழுத்திலிருந்த 2 ¼ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது மூதாட்டி ராமாத்தாள் திருடனின் வாகனத்தை கையால் இருக்கமாக பிடித்தபடி, “திருடன், திருடன்” எனச் சத்தம் போட்டுள்ளார். ராமத்தாளின் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து திருடனைப் பிடிக்க முயன்றுள்ளனர்.

சிஎஸ்கே தோனி 7 தமிழில் புதியப் பாட்டு: கோவைக்காரர்கள் அசத்தல்!

அப்போது அந்த கொள்ளையர் அருகில் கிடந்த கல்லை எடுத்துப் பிடிக்க வந்தவர்களைத் தாக்கி விடுவேன் என மிரட்டி உள்ளார். தொடர்ந்து அந்தக் கல்லைக் கொண்டு அந்த கொள்ளையர் தன்னைத் தானே நெற்றியில் தாக்கிக் கொண்டுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட பொது மக்கள் குற்றவாளியைப் பிடித்து துடியலூர் காவல் நிலையத்திற்குக் கொண்டுபோய் ஒப்படைத்துள்ளனர். கைது செய்தவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி