ஆப்நகரம்

106 வயதிலும் விவசாயம்... கோவை மூதாட்டிக்கு தேடி வந்த பத்மஸ்ரீ விருது!

106 வயதிலும் விவசாயம் செய்து அசத்திவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2021, 2:12 pm

ஹைலைட்ஸ்:

  • குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவிக்கிறது
  • பல்வேறு துறை சாதனையாளர்களூக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன
  • பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் என மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோவை மூதாட்டி பாப்பம்மாள்
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கோவை மூதாட்டி பாப்பம்மாள்
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 106 வயதான மூதாட்டி, 'இயற்கையான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை' என வாழ்ந்து வருபவர்.
தமது கிராமத்தில் 4 ஏக்கர் 29 சென்ட் நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கி விவசாயத்தை தொடங்கிய மூதாட்டி, தற்போது சிறிது சிறிதாக சேர்த்து சுமார் 10 ஏக்கர் வரை நிலத்தை வாங்கி விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

இப்படி ஏக்கர் கணக்காக தனது மனதிருப்திக்காகவும், பிறருக்கு உணவளிக்க என்ற ஒரு நல்ல நோக்கத்துடன் 106 வயதிலும் கொஞ்சமும் தளராமல் மூதாட்டி பாப்பம்மாள் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார்.

பெண்கள் கூட்டம் கோவையில் ஆடிய ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது!

விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட இந்த மூதாட்டியை கௌரவிக்கும் விதத்தில் இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.

அவற்றுக்கெல்லாம் மசூடம் வைப்பதுபோல, நாட்டிலேயே உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பாப்பம்மாளுக்கு வழங்கி மத்திய அரசு அவரை பெருமைப்படுத்தியுள்ளது. மூதாட்டிக்கு கிடைத்துள்ள இந்த விருது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி