ஆப்நகரம்

வெங்காய விலையேற்றத்துக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்!

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து, கோவையில் மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 21 Oct 2020, 5:31 pm
வெங்காய வரத்து குறைவு காரணமாக, தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil வெங்காய விலை
வெங்காய விலை -மாதர் சங்கத்தினர் போராட்டம்


இதன் ஒரு பகுதியாக கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காய மாலை அணிந்தபடி வெங்காய விலை உயர்வைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் வெங்காயத்திற்கு ஒப்பாரி வைத்தும், மாலை அணிவித்தும் அவர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

காவலர் வீரவணக்க நாள்: கோவையில் 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம்

வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும்வரை ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி