ஆப்நகரம்

கொரோனாவை வென்று உயிரை விட்ட பழங்குடியின அதிகாரி, பெரும் சோகம்!

கொரோனா வைரசை போராடி வீழ்த்திய பழங்குடியினர் ஆய்வு மையத்தின் இயக்குநர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 14 Oct 2020, 1:21 pm
கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழங்குடியினர் ஆய்வுக் கழகத்தின் அதிகாரி, இப்போது உயிரிழந்துவிட்டார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கொரோனாவை வென்று உயிரை விட்ட பழங்குடியின அதிகாரி, பெரும் சோகம்!
கொரோனாவை வென்று உயிரை விட்ட பழங்குடியின அதிகாரி, பெரும் சோகம்!


உதகமண்டல பழங்குடியினர் ஆராய்ச்சி கழகத்தின் அதிகாரி சுப்பிரமணியம். வயது 45. இவருக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது.

சுப்பிரமணியன் ஊட்டி பழங்குடியினர் ஆய்வுக் கழக இயக்குநராகக் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சுப்பிரமணியன் பணியாற்றும் கழகம் பழங்குடியினர் நல்வாழ்வு அமைப்பின் கீழ் வருகிறது.

சுப்பிரமணியன் தனது மனைவி, 2 மகன்களுடன் ஊட்டியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

கொரோனா அறிகுறிகளையடுத்து மருத்துவமனையில் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி-மலை ரயில் இன்று முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு ரத்து

பரிசோதனையில் அதிகாரி பாலசுப்பிரமணியனுக்கு கொரொனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான திங்கட் கிழமை மாலையிலே சுப்பிரமணியன் மருத்துவமனையிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவிலிருந்து மீண்ட அதிகாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி