ஆப்நகரம்

தங்கக் கட்டிகளை வைத்து சித்து விளையாட்டு, பெண் சாமியார் கைது!

பூசை செய்வதாகக் கூறி போலி தங்கக் கட்டி விற்க முயன்ற போலிப் பெண் சாமியாரை, கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 27 Nov 2020, 7:39 pm
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா. வயது 40. இந்தப் பெண் கோவை பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வசித்து வந்தார். இவர் சாமி ஆடி குறி சொல்வது போல் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Samayam Tamil தங்கக் கட்டிகளை வைத்து சித்து விளையாட்டு, பெண் சாமியார் கைது!
தங்கக் கட்டிகளை வைத்து சித்து விளையாட்டு, பெண் சாமியார் கைது!


தொடர்ந்து அவர் குறி கேட்க வரும் பெண்களிடம் தன்னிடம் வெளிநாட்டுத் தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அவற்றை சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்குத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதற்கிடையே ரமணாவின் நடவடிக்கையில் அங்குச் சென்று வந்த பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூலூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் ரமணா என்பவர் வீட்டிற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

இல்லாதவர்களுக்காகத் துடிக்கும் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சோதனையில் போலீசார் 6 போலி தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமணா, அவருடன் இருந்த சுரேஷ்பாபு(23), சீனிவாஸ்(22), ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

அடுத்த செய்தி