ஆப்நகரம்

மதுக்கரையில் சிறுத்தை நடமாட்டம்; மக்கள் பீதி

தமிழ்நாடு விவசாயிகள் நல அமைப்பு, கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். மதுக்கரை மலைத்தொடரில் இரண்டு சிறுத்தைகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனை பிடிக்க அவர்கள் கோரினர்.

Samayam Tamil 4 Feb 2019, 5:17 pm
தமிழ்நாடு விவசாயிகள் நல அமைப்பு, கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். மதுக்கரை மலைத்தொடரில் இரண்டு சிறுத்தைகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனை பிடிக்க அவர்கள் கோரினர்.
Samayam Tamil wild_protest

தமிழ்நாடு விவசாயிகள் நல அமைப்பு, கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். மதுக்கரை மலைத்தொடரில் இரண்டு சிறுத்தைகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனை பிடிக்க அவர்கள் கோரினர்.

வனத்துறை கடந்த டிசம்பர் மாதம் ஒரு சிறுத்தையை ஏற்கனவே பிடித்துள்ளது. மேலும் இரண்டு சிறுத்தைகள் அங்கு சுற்றிக்கொண்டிருப்பதாக விவாசாயிகள் தெரிவித்தனர். இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற முகமூடிகளை அணிந்து நீலகிரி ஆட்சியர் ஆலுவலகத்தின் அருகே போராட்டம் நடத்தினர். இந்த இரண்டு சிறுத்தைகள் விவசாயிகள் வளர்க்கும் வாத்து, கோழி உள்ளிட்டவற்றை கொன்று தின்றதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெருமாள் கோவில்பதி, வடிவேலம்பாளையம் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களிலும் சிறுத்தை நடமாடுவதால் அச்சம் உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை உலவுதால் குழந்தைகள் வெளியே நடமாட அஞ்சுகின்றனர்.

அடுத்த செய்தி