ஆப்நகரம்

லொக்கா காதலி உட்பட 3 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தியுள்ளனர்.

Samayam Tamil 12 Aug 2020, 3:29 pm
கோவை பீளமேடு பகுதியை அடுத்த சேரன் மாநகரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்தவர் இலங்கையை சேர்ந்த தாதா அங்கொடா லொக்கா. இவர் இலங்கையில் இருந்து தப்பி வந்து போலியான அடையாளங்களுடன் கோவையில் வசித்து வந்த நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil amani thanji


இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தாஞ்சி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு கை மாறியது. தொடர்ந்து இரு வழக்குகள் பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், உயிரிழந்தது உண்மையாகவே அங்கொடா லொக்கா தானா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல் மற்றும் இதயம் ஆகியவற்றை சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், அங்கொடா லொக்கா கைதான போது எடுக்கப்பட்ட கைரேகைகளையும் ஒப்பீடு செய்து வருகின்றனர். உயிரிழந்தது அங்கொடா லொக்கா தான் என்பதை உறுதிப்படுத்த அவரது பெற்றோரான மததுமகே லயன்ஸ் பெரரா மற்றும் சந்திரிகா பெரரா ஆகியோரின் ரத்த மாதிரிகளை இலங்கையில் இருந்து பெறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் மிக முக்கிய ஆதாரமான டி.என்.ஏ ஆதாரம் கிடைக்கும் என்றும் போலீசார் யூகித்துள்ளனர்.

எஸ்வி சேகருக்கு ஜெயில் ஆசை இருந்தால் அதை அரசு நிறைவேற்றும் - ஜெயக்குமார்

இந்த சூழலில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோவை நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணை தற்போது தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீகுமார் முன்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூவரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி