ஆப்நகரம்

மாற்றுத்திறனாளி மாணவியின் கலைப் படைப்பு, உலகளவில் வரவேற்பு!

சேர்ந்த மாற்றுத் பெண் ஒருவர் தன்னிடம் உள்ள திறமைகளால் மொத்த மாவட்டத்தையே அசத்தி வருகிறார். இவர் திறமையில் உருவாகும் பொருட்களை வாங்க இப்போது பலர் ஆர்வம் .

Samayam Tamil 23 Nov 2020, 10:54 am
அசாத்திய கனவுகளை நடத்திக் காட்டுபவர்கள் சாதாரண மக்கள்தான் என்ற சேகுவேராவின் வார்த்தைகளுக்கு ஆதாரமாக விளங்குபவர்தான் இந்த ராதிகா. இவர் இப்போது செய்து வரும் பணிகள், உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil physically challenged women making toys using newspaper inspirational growth
மாற்றுத்திறனாளி மாணவியின் கலைப் படைப்பு, உலகளவில் வரவேற்பு!


மாற்றத்திற்கான விதையாகும் மாற்றுத் திறனாளிகள்

வாழ்க்கையை மாற்றிய சாதனை மனிதர்கள் உன்னத மனிதர்களின் வெற்றி ரகசியம். உடலின் பாகங்களின் குறைபாடுகளை எதிர்த்து சமூகத்தில் எதிர் நீச்சல் அடிக்கும் மனிதர்கள் மாற்றுத்திறனாளிகள். ஊனம் என்பது உடலை முடக்கும் செயல் அல்ல, அது தனித்துவமிக்க தெம்பை அளிக்கும் என இந்த சமூகத்தில் பலர் வீர நடை போடுகின்றனர்.

என்னது செய்தித்தாள் காகிதத்தில் இப்படி பொம்மைகளா..!

அப்படிப்பட்ட ஒரு அசாத்திய பெண்ணை பற்றித்தான் இந்த கட்டுரையில் காண்கிறோம். கோவையைச் சேர்ந்தவர் ராதிகா ஆறுமுகம். இவர் செய்தித்தாள் காகிதத்தைப் பயன்படுத்தி கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். செய்தித்தாள், மூங்கில் குச்சி, இரும்புக் கம்பி இவைதான் ராதிகாவின் திறமையுடன் நிற்கும் ஆயுதங்கள்.

கம்பி, குச்சி, காகிதத்தை மட்டும் வைத்து பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கிறார்...

2018ம் ஆண்டு முதல் பொம்மை தயாரிப்பை வியாபாரமாகச் செய்து வருகிறார் ராதிகா. இவர் காகிதங்களைப் பயன்படுத்தி பொம்மைகளுக்குச் சதையும் தோற்றத்தையும் கொடுக்கிறார். மூங்கில் குச்சி, இரும்புக் கம்பிகளை கொண்டு குறிப்பிட்ட பொம்மைகளுக்கு வலு அளிக்கிறார்.

குவியும் ஆர்டர்கள்... ஆனாலும் நிறம் கருப்புதான்!

ராதிகா இந்த ஆண்டு மட்டும் 400 பொம்மைகளைத் தயாரித்துள்ளார். இவர் தயாரிக்கும் பொம்மைகள் அனைத்துமே கருப்பு நிறத்தில்தான் இருக்கிறது. இதன் மூலம் அழகு என்பது நிறத்தில் இல்லை என்பதை இவர் உணர்த்துகிறார். இப்போதைய நேரத்தில் ராதிகா தயாரிக்கும் பொம்மைகள் அனைத்தும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பெருமையாக திகழ்கிறார் இந்த பெண்...

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த ராதிகா செய்து வரும் இந்த கைவினைப் பொருட்கள் தயாரிப்பு அவருக்குத் தனித்துவமான பாதையை அமைத்துள்ளது. அதே நேரத்தில் பலருக்கு ராதிகா முன்னுதாரணமாகத் திகழ்ந்து பலரது மனதைக் கவர்ந்து வருகிறார்.

அடுத்த செய்தி