ஆப்நகரம்

ஆதி யோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதி யோகி சிலையை,பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

TNN 24 Feb 2017, 7:19 pm
கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதி யோகி சிலையை,பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Samayam Tamil pm modi unveild 112 feet adhiyogi statue
ஆதி யோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!


கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளயங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது.சிவராத்திரியை முன்னிட்டு இந்த சிலையை திறந்து வைப்பதற்காக,பிரதமர் மோடி கோவை வந்தார்.விமான நிலையம் வந்த பிரதமரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதன் பின்னர் ஈஷா மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமரை,ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார்.பின்னர் ஈஷா யோகா மைய வளாகத்தை சுற்றி பார்த்த பிரதமர்,அங்குள்ள தியான லிங்கம் முன்னிலையில் சில நிமிடங்கள் தியானம் செய்தார்.
அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.மேலும் ஆதியோகி குறித்த புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

Pm Modi unveild 112 feet AdhiYogi statue

அடுத்த செய்தி