ஆப்நகரம்

அமைச்சர் செங்கோட்டையன் உறவினர் எனக் கூறி பல கோடி மோசடி; சுருட்டிக் கொண்டு ஓடிய முதலாளிகள்!

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் உறவினர் எனக்கூறி, நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 20 Feb 2019, 9:46 pm
கோவை 100 அடி சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முல்லை குரூப்ஸ் நிதி நிறுவனம், அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
Samayam Tamil Kovai Fraud


இவர்கள் துவக்கி வைத்த புகைப்படம் மற்றும் வீடியோவைக் வைத்து, அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் குறிஞ்சி நாதன் என்பவர் தனியார் லோக்கல் சேனல்களில் குறைந்த முதலீடு செய்தால் 20 முதல் 30 சதவீதம் வரை லாபத்தொகை தருவதாக உறுதியளித்து விளம்பம் செய்தார்.

இதை நம்பி கோவையில் நூற்றுக்கணக்கானோர், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் ஒரு வருடம் கழித்து சிலர் பணத்திற்கான லாபத் தொகையைக் கேட்டனர். அதற்கு ஓரிரு மாதங்கள் பொறுத்து கொள்ளவும் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

இந்த சூழலில் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் சில பணியாளர்கள், தங்கள் பணத்தைக் திரும்பக் கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் நிறுவன உரிமையாளர் தலைமறைவாகி விட்டார் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி