ஆப்நகரம்

முதல்வர் வரவேற்புக்கு வைத்த கரும்புகளை அள்ளிச் சென்ற மக்கள்

கோவை ரொட்டி கடை மைதானத்தில் முதல்வர் பேசி முடிந்ததும், கூட்டத்தில் இருந்தவர்கள் கரும்பை கொத்து கொத்தாக போட்டி போட்டு எடுத்துச்சென்றனர்.

Samayam Tamil 24 Jan 2021, 12:46 pm
கோவையில் பிரச்சாரத்துக்காக முதல்வர் எடப்பாடி வந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் கரும்புகள் வைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்ததும் வழியில் வைக்கப்பட்டிருந்த கரும்பை மக்கள் போட்டி போட்டி அள்ளிச் சென்றனர்
Samayam Tamil கரும்புகள்


கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் தமிழக முதல்வரை வரவேற்று இருபுறமும் கரும்பால் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து தமிழக முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்வரை வரவேற்க மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

முதல்வர் ரொட்டி கடை மைதானத்தில் பேசி முடிந்ததும், கூட்டத்தில் இருந்தவர்கள் கரும்பை கொத்து கொத்தாக போட்டி போட்டு எடுத்துச்சென்றனர். சிலர் கரும்பை எடுத்ததும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைப்போல தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

செக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்!

விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆளுக்கு ஒரு கரும்பை எடுத்துப்போக வலியுறுத்தியும் கேட்காமல் தூக்கிச்சென்றனர். ஆண்களும் பெண்களும் வாகனங்களுக்கு வழி விடாமல் கிடைத்த வரை லாபம் என்ற நோக்கில் எடுத்துச்சென்றனர். முதல்வர் கூட்டத்தில் மிஞ்சியது 200 ரூபாயும் கரும்பும் தான்.

அடுத்த செய்தி