ஆப்நகரம்

கோவையில் என்ஐஏ திடீர் ரெய்டு: மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என கிடுக்கிப்பிடி!

ஆந்திரா, கேரள, தமிழ்நாடு மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுக்ளுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 12 Oct 2021, 11:12 am
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடந்து வருகிறது.
Samayam Tamil கோவையில் என்ஐஏ திடீர் ரெய்டு: மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என கிடுக்கிப்பிடி!


தமிழகம் உட்பட கேரளா ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடைய 23 நபர்கள் இல்லங்கள், இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக அறியப்படும் புலியகுளம் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தினேஷ் மற்றும் டேனிஷ் ஆகியோர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சந்தோஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை.

திமுக அரசு சொன்னபடி சூயஸ் நிறுவனத்தை ஒழிக்குமா?: கூட்டணி கட்சி எம்பி வலியுறுத்தல்!
கோவை மாவட்டத்தில் மத கலவரங்கள் தொடர்ந்து தூண்டப்படும் சூழலில் இந்த ரெய்டு இப்போது நடத்தப்படுவது அரசியல் ரீதியான நடவடிக்கையா என்றக் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பெரியார் சிலைகள் மீது தாக்குதல், இந்து மத சிலைகள் மீது காழ்ப்புணர்ச்சி என எதிரெதிர் தரப்பினர் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் இந்த என்ஐஏ சோதனைக்கு பின்னால் இருக்கும் மர்மம் குறித்து கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாகதான் மாவோயிஸ்ட் மணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி