ஆப்நகரம்

கோவை ரிஜிஸ்டர் ஆபீஸ்னா சும்மாவா? சிக்குனது லட்சத்திற்கும் மேலே...

கோவை ராஜ வீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Nov 2020, 8:34 am
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil கோவை ரிஜிஸ்டர் ஆபீஸ்னா சும்மாவா? சிக்குனது லட்சத்திற்கும் மேலே...
கோவை ரிஜிஸ்டர் ஆபீஸ்னா சும்மாவா? சிக்குனது லட்சத்திற்கும் மேலே...


அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் தீயணைப்புத் துறை அதிகாரி பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அரசு அதிகாரி ஒருவரைக் கைது செய்தனர். உரிமம் வழங்குவதற்காக ரூ. 5 ஆயிரம் பெற்ற அதிகாரியை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கோவை ராஜ வீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஐந்து நாட்களுக்கு இயக்கப்படும் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்!

சார்பதிவாளர் கார்த்திகேயன் அறை உள்பட அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்திலிருந்த இடைத்தரகர்கள், பத்திரப் பதிவிற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டது தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி