ஆப்நகரம்

வளங்களைப் பெறக் காலபைரவர் வழிபாடு: அலங்கார மாரியம்மன் ஜென்மாஷ்டமி பூசை!

ஜென்மாஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு கோவை அலங்கார மாரியம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் நெய் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.

Samayam Tamil 7 Dec 2020, 6:56 pm
கார்த்திகை மாத தேய்பிறையில் கால பைரவரை வணங்க உகந்த நாட்கள் என நம்பப்படுகிறது. அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்து வழிப்படுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
Samayam Tamil வளங்களைப் பெறக் காலபைரவர் வழிபாடு: அலங்கார மாரியம்மன் ஜென்மாஷ்டமி பூசை!
வளங்களைப் பெறக் காலபைரவர் வழிபாடு: அலங்கார மாரியம்மன் ஜென்மாஷ்டமி பூசை!


இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில் காலனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அலங்கார மாரியம்மன் திருக்கோயிலில் ஒரே கல்லிலான மகா துர்க்கையும் காலபைரவரும் உருவச் சிலை ஒன்று உள்ளது.

இந்த கோயிலில், ஜென்மாஷ்டமி பூசை விழா கடந்த 6ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு 18யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து கால பைரவருக்கு அலங்கார தரிசனங்கள் செய்து அர்ச்சனை பூசைகள் செய்யப்பட்டது.

தனியார் மயமான ஊட்டி ரயில்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். இந்த நிகழ்வு குறித்து கோயில் தலைமை அர்ச்சகர் சிவஜோதி கார்த்திகேயன் கூறுகையில், “இந்த சிறப்பு வாய்ந்த காலபைரவரை வணங்கினால் மிகவும் நல்ல பலன்களையும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்” எனத் தெரிவித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் சிவமுத்து பிரகாஷ், செங்குட்டுவன், மாரித்துரை, அழகுராஜா, விஜயன் ஆகியோர் செய்திருந்தனர்.

அடுத்த செய்தி