ஆப்நகரம்

தமிழக தலைவர்களை அவமதித்த பாஜக: போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்!

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 24 Jan 2022, 10:37 pm

ஹைலைட்ஸ்:

  • குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு
  • இதனை கண்டித்து அனைத்துக் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப் படம்
வரும் 26-ம் தேதி அன்று குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்தாண்டு தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், உள்ளிட்டோரது உருவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் மத்திய அரசால் அவை நிராகரிக்கப்பட்டது ஓட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மேலும், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தை தவிர தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் அனைத்து அலங்கார ஊர்திகளும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

40 வீடுகளை இடித்து அகற்றிய அதிகாரிகள்; இதான் காரணமாம்!
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்துகொண்ட 20க்கும் மேற்பட்டோர் பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், வேலு நாச்சியார், நாராயண குரு ஆகியோரின் புகைப்படங்களையும் கண்டனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதில் சமூக நீதிக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி