ஆப்நகரம்

அண்ணா தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாய்பாபா காலனி அண்ணா தினசரி காய்கறி சந்தை காய்கறி வியாபாரிகள் கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Curated bySrini Vasan | Samayam Tamil 26 Jun 2022, 7:31 pm

ஹைலைட்ஸ்:

  • சாய்பாபா காலனி அண்ணா தினசரி காய்கறி சந்தை
  • வியாபாரிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வியாபாரிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அண்ணா தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு அங்கு காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சந்தையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் மொத்த காய்கறி சந்தையில் மொத்த விற்பனைக்கு பதிலாக சில்லறை விற்பனை நடைபெற்று வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததை அடுத்து இன்று அண்ணா தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்தையின் வயலில் கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது பேசிய வியாபாரிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாராயணன்,

ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடுகள் காரணமாக காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சூழலில் மொத்த சந்தையில் சில்லறை வியாபாரத்தையும் துவங்கியுள்ளதால் அண்ணா காய்கறி சந்தையை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரோட்டை கடக்க முயன்ற பெண்.. அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து.. உடல் நசுங்கி பலியான சோகம்!
கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும் தனித்தனியே விதிகளை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுவதாகவும் இதனை கண்டித்து மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறினார்.

வியாபாரிகளின் இந்த உள்ளிருப்பு போராட்டம் காரணமாக அண்ணா தினசரி காய்கறி சந்தையில் பெரும் பரபரப்பு நிலவியது.....
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி