ஆப்நகரம்

“சார்பட்டா பரம்பரை” மீம்ஸ் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை மாநகராட்சி!

‘சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படக்காட்சிகள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சியை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Samayam Tamil 4 Aug 2021, 9:05 pm
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் கடைவீதி, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ் கட் ரோடு போன்ற இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil “சார்பட்டா பரம்பரை” மீம்ஸ் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை மாநகராட்சி!


இந்த நிலையில், சிறியோர் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்புமக்களின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு, கோவை மாநகராட்சியின் புதிய முயற்சியாக, அண்மையில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படக்காட்சிகள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அதன் காட்சிகள் மூலம் அவசியம் இன்றி வீட்டை வீட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், கோவை மாநகராட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி