ஆப்நகரம்

தமிழக அரசின் முயற்சிகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

பள்ளி, மாணவர்களை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்ல தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2019, 7:27 pm
பள்ளி, மாணவர்களை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்ல தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil download


கோவை வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள ப்ரில்லியண்ட் வித்யா பவன் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஜுபெரென்ஷா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பிரில்லியண்ட் பள்ளி குழுமத்தின் தலைவர் சி.பி.அன்புநாதன் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் பேசிய அவர்,கேள்வி கேட்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும்,இந்திய மாணவர்கள் அமெரிக்க மாணவர்களுக்கெ பெரும் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, கல்லூரி மாணவர்களை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்ல தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்,என கேட்டு கொண்டார்.பின்னர் அவர்,பள்ளி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களின் அசத்தலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை மாணவ,மாணவிகளின் பெற்றோர் உட்பட பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் கண்டு ரசித்தனர்.

அடுத்த செய்தி