ஆப்நகரம்

கோவையில் நீரில் மூழ்கிய பாலம்: ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் மூழ்கிய உயர் மட்ட பாலத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 11 Aug 2020, 10:33 pm
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு பருவமழை காரணமாக நிரம்பியது. தென் மேற்கு பருவமழையை கேரளா மற்றும் நீலகிரியில் நன்கு பெய்ததால் பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வழியே பவானிசாகர் அணையை அடைந்து அந்த அணையின் நீர் மட்டமும் 95 அடிக்கும் மேல் சென்றது.

இதனால், அதன் நீர் தேக்கம் பகுதியில் தண்ணீரானது அதிகரித்து கொண்டே வந்ததால் நீர் தேக்க பகுதி கிராமங்களான காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராம பகுதிகளை நகரத்துடன் இனைக்கும் லிங்காபுரம் - காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது.

இப்பாலத்தினை கடந்து சென்றே காந்தவயல், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது கிராமத்தையும், கிராமத்தினை நகரத்துடன் இனைக்கும் பாலம் என முழுவதும் தண்ணீர் சூழ்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி கிராம மக்கள்.

கோவையில் ஆயுதப்படை காவலர் ஏற்படுத்திய விபத்தின் சிசிடிவி காட்சி..!

மேலும், தேங்கியுள்ள தண்ணீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அத்தியவசிய பொருட்களான பால், காய்கறிகள், சமையல் எரிவாயு என அனைத்தும் பரிசல் மூலமே எடுத்து செல்லப்படும் நிலைமைக்கு அவர்கள் தள்ளபட்டுள்ளனர். எனவே ஆபத்தான பரிசல் பயணங்களை தவிர்க்க உடனடியாக கிராம மக்களின் பயண்பாட்டிற்கு படகு வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி