ஆப்நகரம்

மரண தண்டனையை உறுதி செய்கிறோம்- கோவை சிறுமி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரே வரியில் தீர்ப்பு!

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Samayam Tamil 1 Aug 2019, 1:07 pm
கடந்த 2010ஆம் ஆண்டு கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்தப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, இருவரின் சடலங்களும் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன.
Samayam Tamil SC


இதன் விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார்.

Also Read: இப்படியொரு கேவலமான தொடர்பா? கள்ளக் காதலியின் கையை துண்டாக்கி எறிந்த காதலன்!

இதனை அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, மனோகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர்.

Also Read: நெல்லை முன்னாள் மேயர் கொலை- விசாரணை வளையத்துக்குள் சீனியம்மாள்!

இதன்மூலம் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதித்துறை ஒருபோதும் இரக்கம் காட்டாது என்பதை நிரூபணம் செய்திருக்கின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் அதிகளவில் சிறுவர், சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவது மிகவும் வருத்தத்திற்குரியது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

Also Read: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் லஞ்சம் வாங்கிய இரு அரசு ஊழியர்கள் கைது!

அடுத்த செய்தி