ஆப்நகரம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 16 Sep 2020, 11:43 pm
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றிலுள்ள 10 இளம் அறிவியல் படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை நடைபெற்ற சேர்க்கையில் 45,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil வேளாண் பல்கலைக்கழகம்
வேளாண் பல்கலைக்கழகம்


கொரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களை வழிமறித்த காட்டுயானை... போக்குவரத்து பாதிப்பு

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை நீட்டிக்கப்பட்டு வந்த பொதுமுடக்கம், தற்போது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பிற்கான தடை வருகிற 30ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசைப்பட்டியல் உள்ளிட்ட சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி